Sunday, February 26, 2012

இந்துக்களின் புனிதத்தளம் காசி

இந்துக்களின் புனித பூமி வாரணாசி ( காசி மாநகரம் ) ஒரு மயான பூமி
இங்கே சுடுகாடுதான் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது,

இங்கேதான் அரிசந்திரன் மயானம் காத்தது. இங்குள்ள மயானத்தில்தான் அரிசந்திரனுக்கு சிவபெருமான் உமையம்மையுடன் காட்சியளித்தார்.

இன்றும் காசிவிசுவநாதருக்கு அர்த்தசாம பூசைக்கு சுடுகாட்டில் இருந்து மயான சாம்பல் கொண்டுவரப்பட்டு பூசைகள் செய்யப்படுவது வழக்கமாகஉள்ளது,
மயான சாம்பல் கொண்டுவருவதற்கு என தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த விசயம் நம் மக்களுக்கு தெரிவதில்லை யாரேனும் காசி சென்றால் அவசியம் அங்குள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இதுபற்றி கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்

Thursday, July 21, 2011

இறந்தவர்களில் யாரை வழிபட வேண்டும்

பேய்

இறந்து போன அனைவரும் பேயாக மாறுவது கிடையாது.

அகால மரணமடைந்தவர்களே அவரவர் தகுதிகேற்ற நிலைகளை அடைகின்றனர்.

தீராத ஆசைகள், ஏக்கங்கள் , தீராத பலி போன்றவற்றுடன் இறப்பவர்களே பேய்களாக பூமியில் திரிந்து தங்கள் என்னங்களை

நிறைவேற்றி கொள்ளத்துடிப்பார்கள். எனவே விபத்து, தற்கொலை,ஆகியவற்றால் இறந்தவர்களை வழிபடுதல் கூடாது

அவர்களை வழிபடுவதால் ஆபத்து நேரக்கூடும்.


ஆவி

நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்தவர்கள்,சமுதாய நலத்திற்காக இறந்தவர்கள் பொது நலத்திற்காக தன் உயிரை இழந்தவர்கள்

நற்கதி அடைந்து புண்ணிய ஆத்மாக்களாக வழிபாட்டுக்குரியவர்களாக திகழ்கிறார்கள்.எனவே யாரை வழிபடவேண்டும் என்பதை

அறிந்து அவர்களை நாம் வழிபடுதல் வேண்டும்

Tuesday, May 10, 2011

தமிழர் வழிபாடு முன்னோர் வழிபாடு

ஆதியில் இறந்த நமது முன்னோர்களை வழிபடுவதே தமிழர்களின் வழிபாட்டு முறையாக இருந்தது,

ஆனால் பின்னாலில் இந்த முறை ஆரியர்களின் வழிபாட்டு முறையால் மக்களிடம் இருந்து ஒதுக்கப்பட்டது.

சுடுகாட்டிற்கு இந்துக்கள் செல்வது தடை செய்யப்பட்டது. யாராவது இறந்துவிட்டால் அந்த பிணத்தை
அடக்கம் செய்யச் செல்வதோடு சரி அதன் பிறகு அங்கு செல்வதே கிடையாது.

சுடுகாட்டிற்கு சென்று அங்கு உள்ள வழிபாட்டிற்குரிய அருவ,உருவ, அருவுருவங்களை வணங்கி
அவர்களது அருளைப் பெற்றால் நாம் சகல வளத்துடன் வாழலாம்.

நமது மூதாதையருக்கு தர்பணம் செய்தல் மிக அவசியமாகும்.

நமது மூதாதையரை வழிபட்டால் அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்.

பிறமதத்தவர் இதை தவறாது கடைபிடிப்பதாலேயே அவர்கள் வளமடைகிறார்கள்.

கிறித்துவர்கள் கல்லரைத் திருவிழா மூலம் இறந்த முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துகின்றனர்.

இஸ்லாமியர்கள் இறந்தவர்களை புதைத்து தர்க்கா வழிபாடுசெய்கின்றனர்

ஆனால் இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்வதோடு சரி
அதற்கு பிறகு அங்கு செல்வதுமில்லை அவர்களை பற்றி நினைப்பதும் இல்லை

அப்படி நாம் இருக்கக்கூடாது வருடத்திற்கொரு முறை சுடுகாட்டிற்கு சென்று முன்னோர்களை வழிபடுதல் வேண்டும்

இது நமது கடமை ஆகும்.

சுடுகாட்டில் எப்படி தெய்வீக ஆற்றல் கிடைக்கிறது என்பது பற்றி பிறகு விவரிப்போம்

Saturday, April 16, 2011

சுடுகாட்டு பூசையினால் ஆற்றல் பெற்றவர்கள்

ராமகிருஸ்ண பரம ஹம்சர் தன் வாழ்நாளிலே அதிகம் பூசைகள் செய்த இடம் இது தான்
அதனாலேயே அவர் காளியை நேரிலே கண்டார் விவேகானந்தருக்கும் காளியை காட்டினார்,

பாம்பன் சுவாமிகள், இவர் சுடுகாட்டில் நிலவரை தவம் மேற்கொண்டார், முருகனை நேரிலே கண்டு அவர் அருள்பெற்றவர்

Sunday, April 10, 2011

சிவ பூமி

தெய்வீகமான இடம்,

ஏகாந்தமான இடம்,

தன்னை தானறியும் இடம்,

உயிர்கள் மட்டும் வாழும் இடம்,

இது ஆத்மாக்களின் ஆலயம்

சக்தி மற்றும் சித்திகளின் இருப்பிடம்,

இது சிவன் குடியிருக்கும் திருத்தலம்

இது காளி அரசாட்சி புரியும் இடம்

இங்கு வந்து தெய்வீகத்தை உணராதவர் எவரும் இல்லை

இங்கு தெய்வத்தை நேரிலே கண்களால் காணமுடியும்

காளியின் அருள் பெற்றவரானால் பிறருக்குக் தெய்வத்தை காட்டவும் முடியும்.

இந்த சிவபூமியின் பெருமைகள் பற்றி அடுத்த உரையிலே தொடர்கிறேன்.